முகப்பு
தற்போதைய செய்திகள்

அமெரிக்க கப்பலில் தலைமைப் பொறியாளர் தற்கொலை முயற்சி

அமெரிக்க கப்பலில் பராமரிப்பு பணியை கவனிப்பதற்காக விட்டுவைக்கப்பட்டிருந்த தலைமைப் பொறியாளர் சனிக்கிழமை திடீரென தூக்கிட்டுத் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதையெடுத்து, கப்பல் கேப்டன் உள்பட இருவரையும் கியூ பிரிவு போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:20 PM
பகிர்:

அமெரிக்க கப்பலில் பராமரிப்பு பணியை கவனிப்பதற்காக விட்டுவைக்கப்பட்டிருந்த தலைமைப் பொறியாளர் சனிக்கிழமை திடீரென தூக்கிட்டுத் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதையெடுத்து, கப்பல் கேப்டன் உள்பட இருவரையும் கியூ பிரிவு போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அமெரிக்காவில் உள்ள அட்வன்போர்டு என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சீ மேன் கார்டு கப்பல் இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்ததாகவும், மீனவர்களிடம் திருட்டுத்தனமாக 1500 லிட்டர் டீசல் வாங்கியதாகவும் கடந்த 12-ம் தேதி இந்திய கடலோர காவல் படையால் சிறைபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, கடலோர பாதுகாப்பு குழும போலீஸôர் வழக்குப் பதிந்த நிலையில், விசாரணை கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டது. கியூ பிரிவு கண்காணிப்பாளர் பவானீஸ்வரகி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால் கப்பலில் இருந்த 35 அதநவீன துப்பாக்கிகள் மற்றும் 5680 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், கப்பலில் இருந்த 8 மாலுமிகள் மற்றும் 25 பாதுகாப்பு வீரர்களை கியூ பிரிவு போலீஸôர் வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தனர். முத்தையாபுரம் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் கியூ பிரிவு போலீஸôரும், மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கப்பல் கேப்டன் டுட்னிக் வாலன்டைன், தலைமைப் பொறியாளர் ஷிடரன்கோ வேளரி ஆகியோர் மட்டும் கப்பல் பராமரிப்புக்காக அங்கே இருக்க அனுமதிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 33 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸôர் வெள்ளிக்கிழமை இரவு பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டுச் சென்று அடைத்தனர். கப்பல் பராமரிப்புக்காக மாற்று ஏற்பாடு செய்யும் வரை கேப்டனும், தலைமைப் பொறியாளரும் கப்பலில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களை போலீஸôர் கவனித்து வந்தனர்.

இந்நிலையில், கப்பலில் இருந்த தலைமைப் பொறியாளர் ஷிடரன்கோ வேளரி சனிக்கிழமை பிற்பகலில் கப்பலில் உள்ள ஒரு பகுதியில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதையெடுத்து, அங்கு காவலில் இருந்த போலீஸôர் அவரைத் தடுத்தனர்.

பின்னர், கப்பலில் இருந்த கேப்டன் டுட்னிக் வாலன்டைனையும், தலைமைப் பொறியாளர் ஷிடரன்கோ வேளரியையும் கியூ பிரிவு போலீஸôர் கைது செய்தனர். தலைமைப் பொறியாளர் தற்கொலைக்கு முயன்றதால் அவருக்கு துறைமுக மருத்துவனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் உறுதியளித்த பின்னர் இருவரையும் முத்தையாபுரம் காவல் நிலையத்துக்கு போலீஸôர் அழைத்துச் சென்றனர்.

பின்னர், மாலை 6.30 மணியளவில் தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் உள்ள குற்றவியல் நீதித் துறை நடுவர் (பொறுப்பு) அகிலாதேவி முன்பு ஆஜர்படுத்தினர். தற்கொலைக்கு முயன்ற தலைமைப் பொறியாளரை அரசு மருத்துவமனையில் பரிசோதித்தபிறகு அக்டோபர் 31-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையெடுத்து, இருவரும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →