முகப்பு
தற்போதைய செய்திகள்

கோபியில் ஆக்கிரமிப்பு அகற்றம்.

கோபி நகராட்சி பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து இருந்த கட்டடங்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினர்.

Updated On : 19 அக்டோபர் 2013, 11:37 pm IST
பகிர்:

கோபி நகராட்சி பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து இருந்த கட்டடங்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினர்.

கோபி நகராட்சிக்கு உள்பட்ட அனுமந்தராயன் கோவில் வீதி, தெப்பக்குளம் வீதிகளில் சாலையை ஒட்டி இருபுறமும் கட்டடங்கள் மற்றும் நடைபாதைகள் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது.இந்த தெருக்களில் நகைக்கடைகள், துணிக்கடைகள் உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த தெருக்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு  ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Advertisement

Advertisement

கோபி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் உத்தரவின் பேரில் அனுமந்தராயன் கோயில் வீதி, தெப்பக்குளம் வீதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட நடைபாதை மற்றும் கட்டடங்களை நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

மேலும் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகளையும் அதிகாரிகள் அகற்றினர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளர்களுக்கு கோபி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.