திருமலையில் உள்ள பாபவிநாசம் பகுதியில் உள்ள கடைகள் மூடல்
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் திருமலையை சுற்றி உள்ள நீர்தேக்கங்களையும் காண செல்வர். அதனால் அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக வனத்துறை தேவஸ்தானத்திடம்
திருமலையிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாபவிநாசம் நீர்தேக்கம் புகுதியில் உள்ள கடைகளை சனிக்கிழமை வனத்துறையினர் மூடினர்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் திருமலையை சுற்றி உள்ள நீர்தேக்கங்களையும் காண செல்வர். அதனால் அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக வனத்துறை தேவஸ்தானத்திடம் சில தேவையான வசதிகளை செய்து கொள்ள அனுமதி அளித்தது. அங்கு தற்போது 78 கடைகள் உள்ளது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கேயே தங்கி உள்ளனர். அதனால் அவர்களின் கழிவு நீர் முழுவதும் நீர்தேக்கத்தில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.
மேலும் அது அடர்ந்த வனப்பகுதி ஆதலால் அங்கு வரும் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதற்கு காரணம் அவற்றை அவர்கள் வேட்டையாடுவது என வனத்துறையினர் கருதுகின்றனர். எனவே அங்கு உள்ள கடைகளை மூட வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக வனத்துறை அதிகாரி ஸ்ரீனிவாசலு தெரிவித்தார்.
Advertisement