அனுமதியின்றி மணல் ஏற்றிய இரண்டு லாரிகள் பறிமுதல்
உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீஸார் சனிக்கிழமை மாலை திருநாவலூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் கெடிலம் ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றிய இரண்டு லாரிகளை திருநாவலூர் போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீஸார் சனிக்கிழமை மாலை திருநாவலூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிவாப்பட்டினம் அருகே கெடிலம் ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றிக்கொண்டிருந்த பண்ரூட்டி வட்டம் பெரிய எலந்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த தகவலை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் ஆர்.லலிதா, திருக்கோவிலூர் சார் ஆட்சியர் சுபோத்குமார் ஆகியோருக்கு தெரிவித்தனர்.