சீர்காழி அருகே கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்.
வைத்தீஸ்வரன்கோயில் அருகே உள்ள ஆத்துகுடியை சேர்ந்தவர் க.ராஜ்மோகன்(39),தர்மதானபுரம் கிராம நிர்வாக அலுவலர். இவர் ஞாயிற்றுகிழமை மேல ஆத்துகுடி ஊராட்சி
சீர்காழி அருகே தர்மதானபுரம் கிராம நிர்வாக அலுவலர் மீது ஞாயிற்றுகிழமை தாக்குதல் நடந்தது.
வைத்தீஸ்வரன்கோயில் அருகே உள்ள ஆத்துகுடியை சேர்ந்தவர் க.ராஜ்மோகன்(39),தர்மதானபுரம் கிராம நிர்வாக அலுவலர். இவர் ஞாயிற்றுகிழமை மேல ஆத்துகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் பணியில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த மேல ஆத்துகுடி அ.கவியரசன்(42)கிராம நிர்வாக அலுவலர் ராஜ்மோகனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு அவரது சட்டையை கிழித்துள்ளார்.இது குறித்து வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் ராஜ்மோகன் அளித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன்கோயில் காவல் உதவி ஆய்வாளர் எஸ்.கலைமணி மற்றும் காவலர்கள் கவியரசனை கைது செய்தனர்.