முகப்பு
தற்போதைய செய்திகள்

கூடங்குளத்தில் இருந்து புதுச்சேரிக்கு 67 மெ.வா.மின்சாரம் : நாராயணசாமி

காரைக்கால் - மும்பை ரயில் சேவையை காரைக்காலில் துவக்கி வைத்த மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, காரைக்கால் - புது தில்லிக்கு இடையே விரைவில் ரயில் சேவை துவக்கப்படும் என்று கூறினார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:31 PM
பகிர்:

காரைக்கால் - மும்பை ரயில் சேவையை காரைக்காலில் துவக்கி வைத்த மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, காரைக்கால் - புது தில்லிக்கு இடையே விரைவில் ரயில் சேவை துவக்கப்படும் என்று கூறினார்.

மேலும், அதேப்போல, காரைக்கால் - கன்னியாக்குமரி, காரைக்கால் -  கொல்லம் இடையே விரைவு ரயில்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலித்து படிப்படியாக நிறைவேற்றப்படும்.

மேலும், வேளாங்கண்ணி - கோவா இடையே இயக்கப்படும் விரைவு ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படும். கிழக்கு கடற்கரை ரயில் திட்டம், சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் - மயிலாடுதுறை -  காரைக்கால் வரை சர்வே பணி நடந்து முடிந்து, நில ஆர்ஜித பணி நடந்து வருகிறது. இந்த திட்டமும் விரைவில் நிறைவேற்றப்படும்.

கூடங்குளம் அணு உலையில் இருந்து புதுச்சேரிக்கு 67 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் காரைக்கால் மின் பற்றாக்குறையை போக்குவதற்காக ஒரு தனி ஒதுக்கீடு செய்வது குறித்து, பிரதமரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

காரைக்கால் - பேரளம் இடையே புதிய அகலப்பாதை அமைப்பதற்காக ரு. 178 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் முதல் கட்ட ஒதுக்கீடு ரூ.120 கோடியை ஒதுக்கியிருப்பதாக  ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுவும் விரைவில் நடைமுறைக்கு வரும்.

மேலும், ஓஎன்ஜிசி நிதி ஒதுக்கீட்டில் ஜிப்மர் மூலம் காரைக்காலில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுவதற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்  என்று தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →