முகப்பு
தற்போதைய செய்திகள்

நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமரை சேர்க்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவரையும் ஒரு அங்கமாக இணைத்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:31 PM
பகிர்:

நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவரையும் ஒரு அங்கமாக இணைத்து விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு நிலக்கரி உரிமம் வழங்கப்பட்டது தொடர்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் குமாரமங்கலம் பிர்லா , முன்னாள் நிலக்கரி துறைச்செயலாளர் பரேக் உள்ளிட்ட சிலர் மீது கடந்த சில வாரங்களுக்கு முன் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இதனையடுத்து நிலக்கரிதுறைச்செயலாளர் பரேக் தான் குற்றவாளி என்றால் அத்துறையை வைத்திருந்த பிரதமரும் குற்றவாளியே என்றும் அவருக்கு தெரியாமல் எந்த ஒரு கொள்கை முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.பிரதமரும் சிபிஐ விசாரணைக்கு தயார் என்றும் தான் எதையும் மறைக்க வில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

 இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்கையும் நிலக்கரி ஊழல் வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங்கை சேர்க்க முடியாது என்று மறுத்ததுடன் மனுவை தள்ளுபடி செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →