முகப்பு
தற்போதைய செய்திகள்

திருமலையில் நாகசதுர்த்தி அன்று பெரியசேஷ வாகன புறப்பாடு

திருமலை ஏழுமலையான் குடிக்கொண்டிருப்பது சேஷாசலம் மலை பகுதி. அவரின் ஆபரணம் நாகாபரணம் அவருடைய வஸ்திரம் சேஷ வஸ்திரம் அவரின் படுக்கை நாக படுக்கை அவருக்கு குடை

Updated On : 30 அக்டோபர், 2013 at 8:02 PM
பகிர்:

திருமலையில் நாகசதுர்த்தி அன்று மலையப்பஸ்வாமி பெரிய சேஷ வாகனத்தில் வலம் வர உள்ளார்.

   திருமலை ஏழுமலையான் குடிக்கொண்டிருப்பது சேஷாசலம் மலை பகுதி. அவரின் ஆபரணம் நாகாபரணம் அவருடைய வஸ்திரம் சேஷ வஸ்திரம் அவரின் படுக்கை நாக படுக்கை அவருக்கு குடை ஆதிசேஷன் ஆகையால் வருடந்தோறும் நாகசதுர்த்தி அன்று ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்பஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பெரிய சேஷ வாகனத்தில் உலா வருவது வழக்கம். அதன்படி வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி நாகசதுர்த்தி தினத்தன்று மாலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை பெரிய சேஷ வாகன சேவை நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏழுமலையானுக்கு புஷ்பயாகம்:திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த பின் பெரிய உற்சவமாக கொண்டாடப்படுவது புஷ்பயாகம். அது கார்த்திகை மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திர தினத்தன்று நடத்தப்படும். அதற்காக சென்னை, கர்நாடகா, ஆந்திரா பகுதியிலிருந்து 8 டன் வரை 18 வகையான மலர்கள் தருவிக்கப்படும். அன்று மலையப்பஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் திருக்குளக்கரையில் எழுந்தருள செய்து அவருடைய திருவடி முதல் திருமார்பு வரை மலர்களால் 20 முறை நிவேதிக்கப்படும். அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் சிறந்த முறையில் செய்து வருகிறது. நவம்பர் மாதம் 10ம் தேதி திருவோணம் நட்சத்திர தினத்தன்று புஷ்பயாகம் நடைபெற உள்ளது. இதற்காக அன்று கல்யாணேத்ஸவம், ஊஞ்சல்சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோத்ஸவம் முதலிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி ரவி தெரிவித்தார்.

Advertisement

கபில் தீர்த்தத்தில் கார்த்திகை மாத ஹோமங்கள்:திருப்பதியில் உள்ள கபிலர் தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர ஸ்வாமி கோவில் கார்த்திகை மாதத்தை ஒட்டி ஹோமங்கள் நடத்தப்பட உள்ளது. நவம்பர் மாதம் 4ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 2ம் தேதி வரை கார்த்திகை மாத ஹோமங்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. நவம்பர் 4-6 ம்தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி நவம்பர் 7ம் தேதி நவகிரக ஹோமம், 8 முதல் 9ம் தேதி வரை சுப்ரமணியஸ்வாமி ஹோமம், 10ம் தேதி காலபைரவ ஹோமம், 11 முதல் 19 வரை 9 நாட்கள் சண்டியாகம், 20ம் தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், நவம்பர் 21 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை ரூத்ர ஹோமம், டிசம்பர் 2ம் தேதி சண்டிகேஸ்வர ஹோமத்துடன் காரத்திகை மாத ஹோமங்கள் நிறைவு பெற உள்ளது. இதில் பங்கு கொள்ள விரும்பும் தம்பதிகள் நாளொன்றுக்கு ரூ 500 செலுத்தி பங்கு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.