ஆசிரியர் தினத்தில் கேக் வாங்கச் சென்ற மாணவர் விபத்தில் பலி
நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலையில், குளச்சலைச் சேர்ந்த மனோகரன் மகன் மகேஷ் 18, விருதுநகர் சேதுநாராயணபுரம் முருகேசன் மகன் ரகு 18, குறளரசன் 18 ஆகியோர் படித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலையில், குளச்சலைச் சேர்ந்த மனோகரன் மகன் மகேஷ் 18, விருதுநகர் சேதுநாராயணபுரம் முருகேசன் மகன் ரகு 18, குறளரசன் 18 ஆகியோர் படித்து வருகின்றனர். பல்கலை மாணவர்களான மூவரும் ஆசிரியர் தினத்தில் கேக் வாங்க ஒரே வாகனத்தில் சென்றனர். இவர்கள் திருத்துறைப் பூண்டி கடைவீதிக்கு வந்து கேக் வாங்கிக் கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்றபோது, பெயர்ப் பலகை கம்பியில் மோதினர். இந்த விபத்தில் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.