முகப்பு
தற்போதைய செய்திகள்

கட்டட தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை அருகே கட்டடத்தொழிலாளியை தாக்கியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:31 PM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை அருகே கட்டடத்தொழிலாளியை தாக்கியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சின்னமேலுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி தர்மதுரை(25). இவர் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக அண்மையில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளார்.

இந்த நிலையில், பேனர் அகற்ற கோரி, ஊரில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து  பேனரை தர்மத்துரை அகற்றியுள்ளார்.

 மேலும் பேனரை அகற்ற, அதே ஊரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அழகேசன்(31), ரவி (எ) குமரகுருபரன், சிவா மற்றும் ஞானசெல்வம் ஆகியோர் தான் காரணம் என கூறி, அவர்களிடம் தர்மதுரை தகாறில் ஈடுபட்டராம்.

இதில் அவர்கள் 4 பேரும் தர்மதுரையை தாக்கினராம். இது குறித்து தர்மதுரை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீஸார் அழகேசன், ரவி ஆகிய 2 பேரையும் புதன்கிழமை கைது செய்தனர். மேலும், தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →