முகப்பு
தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்: டிரைவர் கைது

களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது

Updated On : 7 செப்டம்பர், 2013 at 5:57 PM
பகிர்:

களியக்காவிளை அருகே மணல் கடத்த முயன்ற மினி லாரியை போலீஸார் பறிமுதல் செய்து, மினி லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.

களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த மினி லாரியை நிறுத்த சைகை காட்டினர். மினி லாரியில் இருந்தவர்கள் போலீஸாரை ஆபாசமாக பேசியதுடன் மினி லாரியால் போலீஸார் மீது மோத முயன்றனர். போலீஸார் சுதாரித்து விலகினர். இதையடுத்து தப்பி செல்ல முயன்ற மினிலாரியை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்தனர்.

தொடர்ந்து மினி லாரியில் சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்களின்றி மணல் பதுக்கி வைத்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. மணலுடன் மினிலாரியை பறிமுதல் செய்த போலீஸார் அதன் ஓட்டுநர் பாறசாலை ஐங்காமம் பகுதியைச் சேர்ந்த அசோகன் (42) என்பவரை கைது செய்தனர். உரிமையாளர் பாறசாலை குமார் மீது வழக்குப் பதிந்து அவரை தேடி வருகிறார்கள்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.