ஜி.கே.வாசன் வந்த விமானத்தில் மயில் மோதி இறக்கை சேதம்: பயணிகள் பத்திரமாக இறக்கம்
இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த தனியார் விமானத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பயணிகள் இருந்தனர். அந்த விமானம் தூத்துக்குடி விமான
இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த தனியார் விமானத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பயணிகள் இருந்தனர். அந்த விமானம் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறங்கும்போது, மயில் ஒன்று விமானத்தில் மோதியது. இதில், மயில் உயிரிழந்தது. விமானத்தில் இறக்கை சேதம் அடைந்தது. இதனால் விமானம் தடுமாற்றம் கண்டது. இருப்பினும், சாதுர்யமாக செயல்பட்டதால், விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக தரை இறக்கப்பட்டனர். இதன் காரணத்தால், சென்னை செல்ல வேண்டிய விமானம் உடனடியாகக் கிளம்பவில்லை. அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. விமானத்தை சரி செய்ய 2 மணி நேரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.