தந்தை அடித்துக் கொலை: மகன் கைது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சிபேட்டை கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி(80). இவருடைய மகன் தர்மதுரை(30). கூலி தொழிலாளி. கண்ணுசாமி தன்னுடைய சொத்துக்களை விற்று
கட்டையால் தாக்கி தந்தையை கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சிபேட்டை கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி(80). இவருடைய மகன் தர்மதுரை(30). கூலி தொழிலாளி. கண்ணுசாமி தன்னுடைய சொத்துக்களை விற்று மகள்கள் 2 பேரின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இதுதொடர்பாக கண்ணுசாமிக்கும், தர்மதுரைக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்ணுசாமி வீட்டு செலவுக்கு பணம் தருமாறு தர்மதுரையிடம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் நடந்தது.அப்போது தர்மதுரை அங்கிருந்த கட்டையால் கண்ணுசாமியை தாக்கியதால் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தர்மதுரையை இன்று கைது செய்தனர்.
Advertisement