உறவினரை கத்தியால் குத்தியவர் தற்கொலைக்கு முயற்சி
உத்தமபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக உறவினரை கத்தியால் குத்தியவர், அரளி விதை தின்று தற்கொலைக்கு முயன்றதாக செவ்வாய்கிழமை ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு
உத்தமபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக உறவினரை கத்தியால் குத்தியவர், அரளி விதை தின்று தற்கொலைக்கு முயன்றதாக செவ்வாய்கிழமை ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அணைப்பட்டியைச் சேர்ந்த வீருசிக்கு மகன் குணசேகரன். நாராயணசாமி மகன் நந்தகோபால். இவர்கள், இதே ஊரில் ஒரே வீட்டில் சகோதரிகளை திருமணம் செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குணசேகரன் மகன் ராஜேஸ் தற்கொலை செய்து கொண்டாராம். இந்தப் பிரச்னையில் குணசேகரன், நந்தகோபால் ஆகியோரிடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், செவ்வாய்கிழமை மாலை அணைப்பட்டியில், எனது மகனின் சாவுக்கு நீ தான் காரணம் என்று கூறி நந்தகோபாலுடன், குணசேகரன் வாக்கு வாதம் செய்து, அவரை கத்தியால் குத்தி விட்டு ஓடிவிட்டாரம். ஆபத்தான நிலையில் நந்தகோபால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, நந்தகோபாலை கத்தியால் குத்தி விட்டு ஓடிய குணசேகரன், அரளி விதையை தின்று தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. தற்போது அவர்உத்தமபாளையம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Advertisement