முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை:அணை, ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக

Updated On : 11 செப்டம்பர், 2013 at 4:48 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

கடலூர் மாவட்டத்தில் உள்ள அணை மற்றும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரி, அணைகளில் நீர் மட்டம் சற்று அதிகரித்துள்ளது.கடலூர் மாவட்ட அணைகளுக்கு தண்ணீர் வழங்கும் அணைக்கரையில் 8.5 அடி(மொத்த நீர் மட்டம் 9 அடி) தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 518 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இங்கிருந்து வடவாறு வழியாக 628 கன அடியும், வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக 308 கன அடியும், தெற்கு ராஜன் வாய்க்கால் வழியாக 461 கன அடியும், குமுக்கி வாய்க்கால் வழியாக 105 கன அடியும், இதர வாய்க்கால்கள் வழியாக 15 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

வீராணம் ஏரியின் நீர் மட்டம் 46 அடியாக(மொத்த நீர் மட்டம் 47.5 அடி) உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து பாசனத்துக்கு 200 கன அடி தண்ணீரும், சென்னை குடிநீருக்கு 74 கன அடி தண்ணீரும், விஎன்எஸ்எஸ் மதகு வழியாக 227 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டின் நீர் மட்டம் 5.6 அடியாக(மொத்த நீர் மட்டம் 7 அடி) இருக்கிறது. அணையில் இருந்து அரிய கோஷ்டி வாய்க்கால் வழியாக வினாடிக்கு 112 கன அடியும், மானம்பாத்தான் வாய்க்கால் வழியாக 135 கன அடியும், பழைய முரட்டு வாய்க்கால் வழியாக 89 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Advertisement

அதேபோல வாலாஜா ஏரியில் 5.5 அடி(மொத்த நீர் மட்டம் 5.5 அடி) தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 810 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருமாள் ஏரியின் நீர்மட்டம் 5.5 அடியாக(மொத்த நீர் மட்டம் 6.5 அடி) உள்ளது. வெலிங்டன் ஏரியில் 11.80 அடி(மொத்த நீர் மட்டம் 27.4 அடி) தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொழுதூர் அணையின் நீர் மட்டம் 3.4 அடியாக(மொத்த நீர் மட்டம் 8 அடி) உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 66 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெலாந்துறை அணையின் நீர் மட்டம் 6 அடியாக இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 863 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கோமுகி அணையில் 29 அடி(மொத்த நீர் மட்டம் 46 அடி) தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 345 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 16 அடியாக(மொத்த நீர் மட்டம் 36 அடி) உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.