பண்ருட்டி : இளைஞர்கள் கேலி செய்ததால் மாணவி தற்கொலை முயற்சி
பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பணப்பாக்கம் கிராமத்தில் இருந்து சைக்கிள் எடுத்துக் கொண்டு எடையார் போஸ்ட் சென்று அங்கிருந்து ரயில் பிடித்து திருக்கோவிலூரில் உள்ள கல்லூரிக்கு சென்று வந்த மாணவியை, வழியில் இரண்டு வாலிபர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
கடந்த வாரம் புதன்கிழமை மாணவியின் கையை பிடித்து அந்த இளைஞர்கள் இடையூறு செய்த போது, அங்கிருந்த ஒரு விவசாயி, அப்பெண்ணை காப்பாற்றி, இளைஞர்களை எச்சரித்து அனுப்பியுள்ளார்.
இதனால் அந்த மாணவி கல்லூரிக்கே செல்லாமல் இருந்துள்ளார். மன முடைந்த நிலையில், இன்று காலை வீட்டில் இருந்த விஷத்தை எடுத்துக் குடித்து விட்டு கல்லூரிக்கு சென்றுள்ளார். பண்ருட்டி பேருந்தில் சென்று கொண்டிருந்த போது மயக்கமடைந்த விழுந்த அந்த பெண்ணை பொதுமக்கள் பண்ருட்டி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.