பாளை. அருகே தங்கையை கொன்ற அண்ணன்கள் கைது
பாளையங்கோட்டை அருகே காதலனுடன் சென்ற தங்கைக்கு விஷம் கொடுத்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட சகோதரர்களை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை அருகே காதலனுடன் சென்ற தங்கைக்கு விஷம் கொடுத்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட சகோதரர்களை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியை சேர்ந்த மாயாண்டி. இவரது மகள் கோமதி (18). தூத்துக்குடி மாவட்டம், திருவேங்கடநாதபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் முருகன் (22). இருவரும் தூத்துக்குடி அருகே புதுப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இருவரும் காதலித்து வந்தனராம்.
இதற்கிடையே கோமதி, தனது காதலனுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த கோமதியின் சகோதரர்கள் முருகன் (24), சுடலைமுத்து (20) ஆகியோர் தங்கையிடம் சென்று சமாதானம் பேசி வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அழைத்து வந்தனராம்.
வீட்டுக்கு அழைத்து வந்த கோமதிக்கு, முருகன், சுடலைமுத்துவும் வாயில் விஷத்தை ஊற்றி தூக்கில் தொங்க விட்டனராம். தகவலறிந்த சீவலப்பேரி போலீஸார் கோமதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பினர். போலீஸார் வழக்குப் பதிந்து முருகன், சுடலைமுத்துவை கைது செய்தனர்.