அனுமதி இன்றி கூட்டம்: ஜி.கே.மணி உள்பட பாமகவினர் 100 பேர் மீது வழக்கு
அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கீழ்பையூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பாமகவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். இந்தக் கூட்டம் தொடர்பாக பையூர் கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் போலீஸில் ஒரு புகார் அளித்தார்.
அதன்படி, அனுமதியின்றி கூட்டம் நடத்தியது, அனுமதி இன்றி கட்சிக் கொடி ஏற்றியது ஆகியவற்றைக் காட்டி, இரண்டு பிரிவுகளின் கீழ் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, மேகநாதன், மாதேஸ்வரன் உள்பட 100 பேர் மீது காவேரிப் பட்டணம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.