ரூ.10 லட்சம் ஏலச்சீட்டு மோசடி செய்த பெண் கைது.
திருநகரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருநகரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருநகரை அடுத்த தனக்கந்குளத்தை சேர்ந்தவர் செüந்தர்ராஜன் இவரது மனைவி காயத்ரி(25).இவர் திருநகரை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரது மனைவி ஸ்ரீதேவி(35) இவர் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்டு பிடிப்பதாக காயத்ரியை ஏமாற்றி ரூ.10 லட்சம் வரை வாங்கிóகொண்டு பணத்தை கொடுக்காமல் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்ய திட்டமிட்டிருந்தாராம்.இதுகுறித்து காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் திருநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதேவியை கைது செய்தனர்.