பண்ருட்டி ஊராட்சி பள்ளியில் அழுகிய முட்டைகள்
பண்ருட்டி ஒன்றியம் பூங்கோனம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 320 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
பண்ருட்டி ஒன்றியம் பூங்கோனம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 320 மாணவ்ரகள் கல்வி பயின்றுவருகின்றனர்.
அவர்களில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். இந்த பள்ளியில் இன்று மாணவர்களுக்கு சத்துணவோடு கொடுக்க முட்டைகளை சமைக்க எடுத்த போது, அதில் 15க்கும் மேற்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் புழுக்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை நீக்கிவிட்டு மற்ற முட்டைகளை வேக வைக்க தண்ணீரில் போட்டதும் அதில் 30க்கும் மேற்பட்ட முட்டைகள் மிதந்ததால், அவை அழுகி இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், பண்ருட்டியில் உள்ள உயர் நிலையப் பள்ளி ஒன்றில், முட்டைகளை மொத்தமாக எடுத்து வந்து வைத்து அங்கிருந்து அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும், இதனால் முட்டைகள் அதிக நாட்களுக்கு வைத்திருப்பதால் கெட்டுப் போவதாகவும், அதே சமயத்தில் ஒரு பள்ளிக்குத் தேவையான முட்டைகள் சரியான எண்ணிக்கையில் வழங்கப்படுவதில்லை என்றும் பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டைகளை கொண்டு வந்து இறக்குபவர்களே ஒவ்வொரு அட்டையிலும் 3 அல்லது 4 முட்டைகளை எடுத்துக் கொண்டு குறைவான எண்ணிக்கையிலேயே முட்டைகளை வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.