முகப்பு
தற்போதைய செய்திகள்

மீன்பிடி விசைப் படகுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக, புதுச்சேரி மீனவர்களை மீன்பிடி படகுகளுடன் விடுவிக்கக் கோரி விசைப் படகுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தை புதன்கிழமை

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:42 PM
பகிர்:

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக, புதுச்சேரி மீனவர்களை மீன்பிடி படகுகளுடன் விடுவிக்கக் கோரி விசைப் படகுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தை புதன்கிழமை முதல் மேற்கொள்வது என நாகை- காரைக்கால் மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகை, காரைக்கால் மாவட்டங்களிலிருந்து 9 மீன்பிடி விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 65 பேர் கடந்த ஜூலை 30-ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.இதில், கடந்த 4-ம் தேதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 34 மீனவர்களை விடுதலை செய்து, பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், அவர்களின் விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க நீதிமன்றம் மறுத்தது.தங்கள் விசைப் படகுகள் திரும்பக் கிடைக்கும் வரை தாயகம் திரும்ப மாட்டோம் என அறிவித்து பருத்தித்துறை நீதிமன்றம் முன்பாக போராட்டம் நடத்திய மீனவர்கள் 34 பேரும், இந்திய தூதரகத்தின் உதவியுடன் இலங்கையில் தங்கியுள்ளனர்.மீன்பிடி படகுகளை விடுவிக்காமல், 34 மீனவர்களை மட்டும் விடுதலை செய்தது குறித்த ஆலோசனைக்காக நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டம்,நாகை அக்கரைப்பேட்டையில் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 65 பேரையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்கும் வரை, நாகை வட்ட விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டு, வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்தப் போராட்டத்துக்கு வலிமை சேர்ப்பது குறித்த திட்டமிடலுக்காக, நாகை வட்டம் மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டம்,நாகை அக்கரைப்பேட்டை சமுதாயக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.நாகை வட்டத்துக்குள்பட்ட 8 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவப்பஞ்சாயத்தார்களும், காரைக்கால் மாவட்டத்துக்குள்பட்ட 8 மீனவக் கிராமப்பஞ்சாயத்தார்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில்,இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் அனைவரையும், அவர்களின் விசைப் படகுகளுடன் விடுவிக்கக் கோரி பிரதமரையும், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை விடுப்பது.இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் பரஸ்பரமாக மீன்பிடித் தொழில் மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைளை மேற்கொண்டு, 2 நாட்டு மீனவர்களையும்அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்வது.காரைக்கால் மாவட்டம் முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரை உள்ள அனைத்து மீனவக் கிராமங்களையும் சேர்ந்த மீனவர்களை ஒருங்கிணைத்து, அனைத்து மீன்பிடிவிசைப் படகுகளிலும் வெள்ளைக் கொடி ஏந்தி இலங்கையில் தஞ்சம் புகும்போராட்டம் மேற்கொள்வது, தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி புதன்கிழமை முதல் அனைத்து விசைப் படகுகளிலும் கருப்புக் கொடி ஏற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →