முத்துப்பேட்டையில் பலத்த பாதுகாப்புடன் வினாயகர் சிலை ஊர்வலம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அனைத்து இந்து அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த 21ம் ஆண்டு வெற்றி வினாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் ஜாம்பவான் ஓடை வடக்காடு சிவன்கோவில் அருகே இன்று
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அனைத்து இந்து அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த 21ம் ஆண்டு வெற்றி வினாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் ஜாம்பவான் ஓடை வடக்காடு சிவன்கோவில் அருகே இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.இதில் மாநில பாஜக செயலாளர் கருப்பு என்கிற முருகானந்தம்,இந்து முன்னனி மாவட்ட தலைவர் பேட்டை சிவா,இந்து முன்னனி துணைத் தலைவர் ஜெயக்குமார்,ராமஜெயத்தம்மாள் அறக்கடளை நிறுவனர் சி,ராமகிருஷ்ணன் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். ஊர்வலம் முத்துபேட்டை தர்கா,ஆசாத் நகர்,பழைய பேருந்து நிலையம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செம்படவன்காடு பாமினி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.
விழாவிற்கு தஞ்சை காவல் துணை தலைவர் முனைவர் ராம சுப்ரமணி,தஞ்சை காவல் துணை தலைவர் அமல்ராஜ்,மாவட்ட கண்காணிப்பாளர்கள் பாலியராஜ்,மகேஷ்குமார்,தஞ்சையைச் சேர்ந்த சிபி சக்ரவர்த்தி ஆகியோர் தலைமையில் 3000 போலீஸார் பாதுகாஅப்பு பணியில் ஈடுபட்டனர்.