செப்.24-ல் மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம்
மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் செப்.24-ம் தேதி காலை 9 மணிக்குக் கூடுகிறது.மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் காலை 10
மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் செப்டம்பர் 24-ம் தேதி கூடுகிறது.இது தொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் செப்.24-ம் தேதி காலை 9 மணிக்குக் கூடுகிறது.மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.கூட்டத்துக்கு அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை வகிப்பார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும் என்பதை வைகோ உறுதியாகத் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக வைகோ கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
நரேந்திர மோடியின் வருகையால் ஏற்படும் மாற்றம் மற்றும் 5 மாநிலத் தேர்தலுக்குப் பிறகே வைகோ கூட்டணி தொடர்பான முடிவு எடுத்து அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.வாஜ்பாயைப் பாராட்டிப் பேசியதால் பாஜகவுடன் கூட்டணி என்பதெல்லாம் இல்லை. கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் வைகோ முடிவு எடுப்பார் என மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.