பயிர் கடன் வழங்கக் கோரி கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும், பயிர் பாதுகாப்பு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 4 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள்
சிதம்பரம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு பயிர் கடன் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும், பயிர் பாதுகாப்பு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 4 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கீழமணக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை பூட்டு போட்டு பூட்டும் போராட்டத்தை புதன்கிழமை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் போராட்டத்திற்கு புவனகிரி போலீஸார் அனுமதி மறுத்ததால் கீழமணக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு புதன்கிழமை கிளைச் செயலாளர் நடராஜன் தலைமையில் விவசாயிகள் 50 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.