முகப்பு
தற்போதைய செய்திகள்

பழைய ரூபாயை தந்தவரை காயப்படுத்திய வேன் கிளினீர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த தாண்ப்பூண்டி அருகே போரூர் புதுநகரை சேர்ந்தவர் கோபால் மகன் லட்சுமணன்(45). புதனன்று இவர் கவரப்பேட்டைக்கு சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் வேனில் வீடு

தற்போதைய செய்திகள்

பழைய ரூபாயை தந்தவரை காயப்படுத்திய வேன் கிளினீர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த தாண்ப்பூண்டி அருகே போரூர் புதுநகரை சேர்ந்தவர் கோபால் மகன் லட்சுமணன்(45). புதனன்று இவர் கவரப்பேட்டைக்கு சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் வேனில் வீடு

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:43 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த தாணிப்பூண்டி அருகே உள்ள போரூர் புது நகரை சேர்ந்த லட்சுமணன் என்பவரை தாக்கிய சம்பவத்தில் புதன்கிழமை வேன் கிளீனர் வேலு பாதிரிவேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தாண்ப்பூண்டி அருகே போரூர் புதுநகரை சேர்ந்தவர் கோபால் மகன் லட்சுமணன்(45). புதனன்று இவர் கவரப்பேட்டைக்கு சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் வேனில் வீடு திரும்பினார்.அப்போது அந்த வேனில் கிளீனராக இருந்த அமரம்பேடு பகுதியை சேர்ந்த செல்லதுரை மகன் வேலு(30) என்பவரிடம் லட்சுமணன் 10 ரூபாயை தந்து உள்ளார். அது பழைய ரூபாய் நோட்டாக இருப்பதாகவும், செல்லாது என வேலு கூறவே அந்த ரூபாய் நோட்டு நன்றாகத் தான் இருக்கிறது வரும்போது இதே போன்று வேனில் கொடுத்தது தான் என லட்சுமணன் கூறவும் இப்படியே வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் கிளீனர் வேலு ஆத்திரப்பட்டு லட்சுமணனை வேனில் தள்ளினார்.

இதில் தலையில் காயமடைந்த லட்சுமணன் இது குறித்து பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வேலுவை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். தொடர்ந்து லட்சுமணன் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →