ஏமாற்றிய ஈமு கோழி ஏலம்: ஒருவரே வந்திருந்து மிகக் குறைந்த விலைக்கு எடுத்த அவலம்
ஈமு கோழி வளர்ப்பும் வியாபாரமும் அண்மைக் காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஈமு கோழி ஏலம் விடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் இந்த ஏலத்துக்கு அழைக்கப்பட்டிருந்தது.

ஈமு கோழிகள் சென்ற வருடங்களில் பலத்த எதிர்பார்ப்பையும், விற்பனையில் பெரும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது. அதனால் இன்றைய ஈமு கோழி ஏலத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், ஏலத்துக்கு ஒருவர் தான் வந்திருந்தார். மேலும் வருவார்கள் என காலை 11 முதல் 1 மணி வரை காத்திருந்தபோதும், அந்த ஒருவரைத் தவிர வேறு எவரும் அங்கே வரவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இரா.சுகுமார் முன்னிலையில் நடைபெற்ற ஈமு கோழி ஏலத்தில் பங்கேற்ற திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரி ஜெகன்மோகன், அவரது மகன் காமராஜ் இருவரும் கேட்ட ஏலத் தொகை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜோடி ரூ.35,000 ஆக இருந்த ஈமு கோழி இப்போது ரூ.110 ஆக சரிந்துவிட்டது என்பது தான் அந்த அதிர்ச்சிகரமான விஷயம்.