ஆந்திராவிற்கு கடத்த இருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்துவது வாடிக்கையாக உள்ள நிலையில் பல முறை போலீஸாரும் நுகர்பொருள் வாணிப கடத்தல் தடுப்பு அதிகாரிகளும் வாகன
தற்போதைய செய்திகள்ஆந்திராவிற்கு கடத்த இருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்துவது வாடிக்கையாக உள்ள நிலையில் பல முறை போலீஸாரும் நுகர்பொருள் வாணிப கடத்தல் தடுப்பு அதிகாரிகளும் வாகன
சென்னையில் பல இடங்களில் சேகரித்து ஆந்திராவிற்கு கடத்த இருந்த 15 டன் ரேஷன் அரிசியை கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்துவது வாடிக்கையாக உள்ள நிலையில் பல முறை போலீஸாரும் நுகர்பொருள் வாணிப கடத்தல் தடுப்பு அதிகாரிகளும் வாகன சோதனையில் கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். குறிப்பாக கும்மிடிப்பூண்டி மார்க்கமாக சாலை மற்றும் ரயில் மார்க்கமாக ஆந்திராவிற்கு ரேஷன் அரிசியை கடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று அதிகாலை ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் போலீஸாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார். அப்போது வந்த ஒரு லாரியை மடக்கி சோதனையிட்ட போது அதில் மூட்டை மூட்டைகளாய் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்தது தெரியவந்தது.தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தியதில் சென்னையில் பல இடங்களில் ரேஷன் அரிசியை வாங்கி ஒரு இடத்தில் பதுக்கி அங்கு மூட்டை கட்டி ஆந்திராவிற்கு கடத்த கொண்டு செல்லப்பட இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸார் லாரியில் இருந்து 15 டன் மதிப்புள்ள 260 அரிசி மூட்டைகளை கைப்பற்றினர். இது தொடர்பாக அந்த லாரியின் டிரைவரான ஆந்திர மாநிலம் பங்காரபாளையத்தை சேர்ந்த வெங்கடப்பா மகன் பாபு(25), கிளீனரான ஆந்திர மாநிலத்தை சித்தூர் பகுதியை சேர்ந்த பாஷா(35) என்பவரை ஆரம்பாக்கம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.