தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குரு கைது செய்யப்பட்டது செல்லும்
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குரு செய்யப்பட்டதை ரத்து செய்த மத்திய அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குரு செய்யப்பட்டதை ரத்து செய்த மத்திய அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜெயங்கொண்டம் தொகுதியின் பா.ம.க. எம்.எல்.ஏ. ஜெ.குரு இரண்டாவது முறையாக கடந்த ஜூலை 3-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். இந்த உத்தரவை மத்திய அரசு ஆகஸ்ட் 22-ம் தேதி ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதேநேரத்தில், மூன்றாவது முறையாக குரு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.
நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு சரியான காரணங்களுடன் கைது உத்தரவை ரத்து செய்யவில்லை எனக் கூறி உத்தரவை ரத்து செய்தனர்.