சிதம்பரத்தில் செப்.23-28-ல் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டி!
இந்த உலக தரம் வாய்ந்த போட்டிகளை கடலூர் மாவட்ட டென்னிஸ் அசோசியேஷன் மற்ஏறும் தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. போட்டியில் 45+. 55+. 65+ வயதுக்கு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ராஜா முத்தையா ITF (International Tennis Federation) சீனியர்ஸ் என்ற பெயரில் பெரியவர்களுக்கான டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட டென்னிஸ் அசோசியேஷன் செயலாளர் ஆர்.எம்.சுவேதகுமார் தெரிவித்துள்ளது:
இந்த உலக தரம் வாய்ந்த போட்டிகளை கடலூர் மாவட்ட டென்னிஸ் அசோசியேஷன் மற்ஏறும் தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. போட்டியில் 45+. 55+. 65+ வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இரு வீரர்களும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு வீரரும், மற்றும் மும்பை, கல்கத்தா, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட டென்னிஸ் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
செப்.28-ம் தேதி பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. போட்டிகளின் மொத்த பரிசு தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாகும். இப்போட்டிக்கு தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன், ஒரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவை உதவி அளித்துள்ளது என ஆர்.எம்.சுவேதகுமார் தெரிவித்தார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இயக்குநர் ரவீந்திரன், மாவட்ட டென்னிஸ் அசோசியேஷன் தலைவர் ஆர்.கே.கணபதி, செயலாளர் ஆர்.எம்.சுவேதகுமார், பொருளாளர் கனகவேல், கே.வி.பாலமுருகன் ஆகியோர் செய்துள்ளனர்.