தற்போதைய செய்திகள்

வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நீதிபதி கவலை

வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தைரியமாக நீதிமன்றத்தை அணுகி நியாயம் பெற வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.

எஸ். பாண்டியன்

வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தைரியமாக நீதிமன்றத்தை அணுகி நியாயம் பெற வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.சரவணப்பெருமாள் தெரிவித்தார்.

விருதுநகரில் அகிலந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து பெண்கள் மீதான வரதட்சணை கொடுமைகளும் சட்ட தலையீடும் என்கிற தலைப்பில் இலவச சட்ட உதவி முகாம் தனியார் அரங்கத்தில் சனிக்கிழமை நடந்தது.  இம்முகாமிற்கு ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.லட்சுமி தலைமை வகித்தார். வழக்கறிஞர் சுப்புராம் வரவேற்புரை வழங்கினார். இதில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.சரவணப்பெருமாள் பங்கேற்று பேசியதாவது:

வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள் துணிச்சலாக நீதிமன்றத்தை அணுகி நியாயம் பெற வேண்டும். இப்பிரச்னையால் பாதிக்கப்படும் பெண்கள், கணவரின் வீட்டிற்கு பயந்து கொண்டு காவல் நிலையத்தில் புகார் செய்ய வருவதில்லை. கணவர் வீட்டார்கள் பாதிக்கப்பட்டு விடுவார்களோ என்கிற அச்சம் இருக்கிறது. தங்களின் வாழ்க்கை பறிபோகிறது என்பதை உணர்ந்து கொண்டாலே போதும், புகாரை காவல் நிலையத்தில் போராடியாதவது வழக்கு செய்யலாம்.  இதுபோன்று புகார் கொடுக்க முன்வராத காரணத்தால் பெரும்பாலும் குறைந்த அளவிலேயே வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் மாவட்ட நீதிபதி எஸ்.சரவணபெருமாள் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகள் குறித்து நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களின் முன்னாள் பொதுமக்கள் எடுத்துரைத்தனர். அருப்புக்கோட்டை அருகே தோணுகாலைச்  சேர்ந்த கற்பகவள்ளி கூறுகையில், தனது சகோதரி பாண்டியம்மாள் வதரட்சணை கொடுமையால் உயிரிழந்தார். ஆவியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் வழக்கு பதிவு செய்யவி்ல்லை. மகளிர் சுய உதவிக் குழு பெண்களுடன் சென்று  உண்மை நிலையை எடுத்துக் கூறியதால் வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் நிலுவையிலேயே இருப்பதாலும், எதிர் தரப்பினர் வாய்தா வாங்கி தப்பி வருவதாகவும் நீதிபதியின் முன்பு தனது கருத்தை பதிவு செய்தார்.

விருதுநகர் பாத்திமா நகர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கற்பகவள்ளி(25). இப்பகுதியில் வேறு பிரிவைச் சேர்ந்தவரை கலப்பு திருமணம் செய்தேன். தனது கணவர் வீட்டில் உள்ளவர்கள் கூடுதலாக பணமும், நகையும் கொண்டு வந்தால் தான் சேர்ந்து வாழ முடியும் என கூறுகின்றனர். பிரிந்து வாழ்ந்து வருகிறேன். காவல் நிலையத்தில் புகார் செய்தேன். பிசிஆர் பிரிவிலும், வரதடசணை பிரிவிலும் பதியாமல் சாதரண வழக்கில் பதிவு செய்ததாக குறிப்பிட்டார். மேலும், வழக்கும் நீதிமன்றத்தில் முடிக்காமல், எதிர் தரப்பினர் வாய்தா வாங்கி வருவதாக தெரிவித்தார். இதேபோல், 28 வழக்குகள் நீதிபதியின் முன்பு பதிவாகியது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பாண்டியம்மாள்,  வழக்கறிஞர்கள் இந்திரா ஜெயசீலி, மைக்கேல்பாரதி, மாரிமுத்து ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாநில துணைச் செயலாளர் பி.ஜான்சிராணி உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிறைவாக என்.உமாமகேஸ்வரி நன்றி கூறினார். இந்த முகாமில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT