முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கையிலிருந்து சிறை மீண்ட நாகை, காரைக்கால் மீனவர்கள் 34 பேர் நாகை திரும்பினர்

நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலிருந்து 9 விசைப் படகுகளில்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 65 மீனவர்கள், கடந்த ஜூலை 30-ம் தேதிஇலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

இலங்கை சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற நாகை,காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 34 பேர், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நாகை வந்தடைந்தனர்.

நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலிருந்து 9 விசைப் படகுகளில்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 65 மீனவர்கள், கடந்த ஜூலை 30-ம் தேதிஇலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.இதில், 34 பேர் பருத்தித்துறை ஜப்னா சிறையிலும், 31 பேர் திரிகோணமலைசிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாகை மீனவர்கள் 21 பேரையும், காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் விடுதலை செய்து அந்த நீதிமன்றத்தில் கடந்த 4-ம் தேதி உத்தரவிடப்பட்டது.இருப்பினும், அவர்களின் படகு விடுவிக்கப்படாததால் 34 பேரும் பருத்தித்துறை நீதிமன்றம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, ஒரு விசைப் படகுக்கு ஒருவர் வீதம் 5 பேர் மட்டும் இலங்கையில் தங்கியிருந்து விசைப் படகுகள் விடுவிக்கப்படும் போது, படகுடன் செல்லலாம்.மற்றவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பலாம் என பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், 34 பேரும் தங்கள் படகு திரும்பக் கிடைக்கும் வரை நாடு திரும்பமாட்டோம் என வலியுறுத்தி, இந்திய தூதரகத்தின் கண்காணிப்பில்,கொழும்புவில் உள்ள நரியானா முகாமில் தங்கியிருந்தனர்.விடுதலைக்குப் பின்னர் சுமார் 17 நாள்கள் இலங்கையிலேயே தங்கியிருந்த நாகை, காரைக்கால் மீனவர்கள் 34 பேரும் சனிக்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, ராமேஸ்வரம் மண்டபம் முகாம் இந்தியக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர், அங்கிருந்து வேன்களில் புறப்பட்ட நாகை, காரைக்கால் மீனவர்கள் 34பேரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தங்கள் ஊருக்கு வந்தடைந்தனர். நாகை மீனவர்கள் 21 பேரும்  நாகை மீன்வளத் துறை இணை இயக்குநர் அலுவலகத்துக்குச் சென்றனர். காரைக்கால் மீனவர்கள் 13 பேரும் காரைக்கால் சென்றனர்.சிறை மீண்டு நாடு திரும்பிய மீனவர்களை வரவேற்ற நாகை மீன்வளத் துறை இணை இயக்குநர் சுப்புராஜ், மீனவர்களின் நிலை குறித்து விசாரித்தார்.17  நாள் போராட்டம் பயனற்றுப் போனது

அப்போது, படகு கிடைக்கும் வரை நாடு திரும்ப மாட்டோம் என்ற உறுதியுடன்,விடுதலைக்குப் பின்னரும் குடும்பத்தை பிரிந்து 17 நாள்களாக இலங்கையில் தங்கியிருந்த நாங்கள், இந்திய தூதரகத்தின் உதவியின்மையால் படகுக் கிடைக்காமலேயே ஊர் திரும்பியுள்ளோம் என்றனர் மீனவர்கள்.படகு திரும்பக் கிடைக்கும் வரை 5 பேர் இலங்கையில் தங்கியிருக்கலாம் என பருத்தித்துறை நீதிமன்றம் அறிவித்த நிலையிலும், இந்திய தூதரக அதிகாரிகள்,விடுதலைப் பெற்ற அனைவரும் நாடு திரும்ப வேண்டும் என வற்புறுத்தித் தங்களை திருப்பி அனுப்பியதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்திய தூதரகம் இந்திய மீனவர்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல், இலங்கை அரசுக்கு சாதகமாகவே செயல்படுகிறது எனவும்,தங்களுக்கு முறையான உணவைக் கூட தூதரகம் வழங்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.மத்திய, மாநில அரசுகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொண்டு, இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தங்கள் விசைப் படகுகளை மீட்டுத் தந்து, தங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →