மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்
தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் 4-வது மாநில மாநாடு தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் மூத்த நிர்வாகி சங்கரசுப்பு கொடியேற்றினார். மாநில தலைவர் அறிவழகன்
தமிழகத்தில் மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்துறை பொறியாளர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் 4-வது மாநில மாநாடு தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் மூத்த நிர்வாகி சங்கரசுப்பு கொடியேற்றினார். மாநில தலைவர் அறிவழகன் மாநாட்டுக்கு தலைமை வகித்தார்.
கேரள மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் பொதுச் செயலர் பிரதீப் மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். பொறியாளர் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீதர் அறிக்கை தாக்கல் செய்தார். துணைப் பொதுச் செயலர் பரிமேலழகர் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். பொருளாளர் ஜீவானந்தம் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். மாநாட்டில்,
மக்களுக்கான மாற்று மின்கொள்கைகளை அமல்படுத்திட வேண்டும். 1.12.2011 முதல் மின்வாரிய பணியாளர்கள் புதிய ஊதிய உயர்வு அமல்படுத்திட வேண்டும். மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மின்திருட்டை தடுத்து நிறுத்தி, கம்பியிழப்பை குறைத்திட வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஏற்பட்டுள்ள கடன் நஷ்டத்தைப் போக்க மாற்று கொள்கைள் உருவாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டின்போது நிறைவேற்றப்பட்டன.
பொறியாளர் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலர் கருமலையான், பொறியாளர் சங்க மாநில தலைவர் விஜயன், சிஐடியு மாநில செயலர் ரசல், தூத்துக்குடி மாவட்ட சிஐடியு செயலர் பாலசுப்பிரமணியன், மண்டல செயலர் வண்ணமுத்து, அமைப்பு செயலர் அருள்செல்வன், மாநில துணைத் தலைவர்கள் ராமசுப்பு, குருவேல், சங்கரேஸ்வரன், மாநில செயலர் பழனி உள்பட பலர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.