முகப்பு
தற்போதைய செய்திகள்

முல்லை, மல்லிகை மணம் வீசும் முட்லூரைச் சுற்றியுள்ள கிராமங்கள்!

சிதம்பரம் அருகே சி.முட்லூர் உள்ளிட்ட கிராமங்களில் முல்லை மற்றும் மல்லிகை பூக்கள் பயிரிட்டு அமோக விளைச்சல் பெற்று வருகின்றனர். அதிகமாக இப்பகுதியில் பூக்கள் பயிரிடப்படுவதால் சென்ட் தொழிற்சாலை

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:54 PM
பகிர்:

சிதம்பரம் அருகே சி.முட்லூர் உள்ளிட்ட கிராமங்களில் முல்லை மற்றும் மல்லிகை பூக்கள் பயிரிட்டு அமோக விளைச்சல் பெற்று வருகின்றனர். அதிகமாக இப்பகுதியில் பூக்கள் பயிரிடப்படுவதால் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதம்பரம் அருகே சி.முட்லூரைச் சுற்றியுள்ள கிராமங்களான கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி, சின்னகுமட்டி, பெரியகுமட்டி, கீழ்அனுவம்பட்டு, ஆதனாவூர், மஞ்சக்கொல்லை உள்ளிட்ட சுமார் 20 கிராமங்களில் அப்பகுதி மக்கள் முல்லை மற்றும் மல்லிகை பூக்களை சுமார் 2ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டு அமோக விளைச்சலை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தது: வருடத்திற்கு ஒரு முறை பூச்செடிகளை களை எடுத்து துளுக்கும் 4 மாதங்களை தவிர மற்ற 8 மாதங்கள் பூக்கள் பூத்து வருமானத்தை தருகிறது. திருமணம் மற்றும் கோயில் வைபவ காலங்களில் அதிகபட்சமாக கிலோ ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காலங்களில் கிலோ ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அதிகமான மகசூல் பெற்றுள்ளதால் கிலோ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முல்லை மற்றும் மல்லிகை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரமும், ஆண்டுக்கு ரூ.1லட்சம் வருமானம் கிடைக்கிறது என்கிறார் பி.ரவீந்திரன்.

சென்ட தொழிற்சாலை தொடங்க வேண்டும்: சிதம்பரம் அருகே முல்லை மற்றும் மல்லிகை பூக்கள் அதிகமாக பயிரிடப்படுவதால் விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அப்பகுதியில் தமிழகஅரசு சென்ட் தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால் பூக்கள் பயிரிடும் விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும் என சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.