நெல்லையில் பயிற்சி மருத்துவர்கள் 2ஆவது நாளாக ஸ்டிரைக்: சித்த மருத்துவ மாணவர்களும் ஆதரவு
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை வழக்குரைஞர் தாக்கிய சம்பவத்தை அடுத்து மருத்துவர்கள், மாணவர்களது வேலைநிறுத்தப் போராட்டம் 2ஆவது நாளாக
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை வழக்குரைஞர் தாக்கிய சம்பவத்தை அடுத்து மருத்துவர்கள், மாணவர்களது வேலைநிறுத்தப் போராட்டம் 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது.பயிற்சி மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும் வியாழக்கிழை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.