முகப்பு
தற்போதைய செய்திகள்

வழக்குரைஞரை கொலை செய்ய முயன்ற கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் கைது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி கிராமத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஞானராஜ்(25).இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் மனோகரன்(24) குடும்பத்திற்கும் கடந்த

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி கிராமத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஞானராஜ்(25).இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் மனோகரன்(24) குடும்பத்திற்கும் கடந்த 5 ஆண்டுகளாக பகை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் திருச்சி இளந்தாமரை மாநாட்டையொட்டி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம்,சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், அன்னை அபிராமி ஆகியோர் போலீஸாருடன் ரயில் நிலைய சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர்.அவர்களுடைய வாகனத்தில் வழக்குரைஞர் ஸ்டிக்கர் ஒட்டியும்,ஆனால் நம்பர் பிளேட் இன்றியும் காணப்பட்டது.இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்களை விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் கும்பகோணம வைராக்கியம் நகரைச் சேர்ந்த ஜூலியர்சீசர் மகன் நெல்சன்(23),சேகர் மகன் கதிரவன்(23),சுவாமிநாதன் மகன் சதீஷ்குமார்(25) எனத் தெரியவந்தது.மேலும் அவர்கள் திருத்துறைபூண்டி தனியார் விடுதியில் தங்கி வழக்குரைஞர் மனோகரன் நடவடிகைகளை கவனித்து வந்ததாகவும்,காலையில் மனோகரன் நடைபயிற்சிக்கு செல்லும்போது அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த டிஎஸ்பி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். மகோகரனை கொலை செய்ய கூலிப்படையை தயார் செய்த வழக்குரைஞர் ஞானராஜ் மற்றும் அவருக்கு உதவிய கவின்ராஜ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →