முகப்பு
தற்போதைய செய்திகள்

அறந்தாங்கி: மகளைக் கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலட்டூரில் இரண்டரை வயது மகளை கொன்றுவிட்டு தம்பதியர் தற்கொலை செய்து கொண்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலட்டூரில் இரண்டரை வயது மகளை கொன்றுவிட்டு தம்பதியர் தற்கொலை செய்து கொண்டனர்.

அறந்தாங்கி சீலட்டூரைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ரமேஷ் (35), அவரது மனைவி சீதா (28), அவர்களது குழந்தை இரண்டரை வயது அஜீதா ஆகியோர் அவர்களது வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்த நிலையில் கிடந்தனர். இன்று காலை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, விரைந்து வந்து, அவர்களது உடல்களைக் கைப்பற்றிய அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரமேஷ் வெளிநாடு சென்று பணியாற்றி வந்துள்ளார். இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.