முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவி கடத்தல் விவகாரம்: கிருஷ்ணகிரி அருகே இயல்பு நிலை திரும்பியது

கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியம். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு 16 வயதில் பிளஸ் 1 படிக்கும் மகள் உள்ளார். இந்த நிலையில், வேட்டியம்பட்டி

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே வேட்டியம்பட்டியில் பிளஸ் 1 மாணவி கடத்தல் சம்பவத்தில் மாணவி மீட்கப்பட்டதையடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பியது.

கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியம். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு 16 வயதில் பிளஸ் 1 படிக்கும் மகள் உள்ளார். இந்த நிலையில், வேட்டியம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த தியாகராஜனின் மகன் லோகேஷ்(25) என்பவர் கடந்த 26-ஆம் தேதி அதிகாலை தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக தேவகி கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் மாவட்ட எஸ்பி எஸ்.ஆர்.செந்தில்குமார் உத்தரவின்படி, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவியை கடந்த வியாழக்கிழமை பெங்களூரில் மீட்டனர். அப்போது அவருடன் இருந்த லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக்(எ)விஜய், இளவரசன், அனந்தராமன் ஆகியோரை போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர், அந்த மாணவியை கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1-இல் நடுவர் விஜயகுமார் முன்னிலையில் போலீஸôர் ஆஜர்படுத்தினர். அப்போது தன் விருப்பத்திற்கு மாறாக லோகேஷ் தன்னை கடத்தி சென்றதாகவும், தான் தன் தாயுடன் செல்ல விரும்புவதாகவும் அந்த மாணவி தெரிவித்தார். இதையடுத்து மாணவியை பெற்றோருடம் செல்ல நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை போலீஸôர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே கடத்தப்பட்ட மாணவி மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞர் லோகஷ் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. இதையொட்டி அந்த பகுதியில் வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டு ஏராளமான போலீஸôர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.இந்த நிலையில், மாணவி தனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதால், அந்த பகுதியில் நிலவி வந்த பதற்றம் தணிந்து ஞாயிற்றுக்கிழமை இயல்பு நிலை திரும்பியது. எனினும், அங்கு தொடர்ந்து போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →