தற்போதைய செய்திகள்

அக்.2ல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்த ஆட்சியர் உத்தரவு

மேலும், பசுமை குடியிருப்பு திட்டத்தில் 2011-12ல் கட்டப்பட்ட வீடுகளில் சூரிய ஒளியுடன் கூடிய விளக்கை தொடர்ந்து பராமரித்து வரும் வகையில் பயனாளிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். கிராமங்களில்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சிகளிலும் அக்.2ல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வரைவு வாக்காளர் பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளவர்கள் பெயர் வாசிக்கப்பட்டு கிராம சபையின் ஒப்புதலை பெற வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் செயல்படுத்தியுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து விவரங்கங்களையும் தெரிவிக்க வேண்டும். தேசிய ஊராக வேலை உறுதித் திட்டத்தில் இதுவரையில் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், முடியாதவைகள் குறித்தும் தெரிவிக்கவும் வேண்டும்.

மேலும், பசுமை குடியிருப்பு திட்டத்தில் 2011-12ல் கட்டப்பட்ட வீடுகளில் சூரிய ஒளியுடன் கூடிய விளக்கை தொடர்ந்து பராமரித்து வரும் வகையில் பயனாளிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். கிராமங்களில் எத்தனை பணிகள் தன்னிறைவு திட்டத்தில் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் கட்டாயம் பொதுமக்களின் அத்தியவாசிய தேவைக்கு பயன்படும் திட்டமாக தேர்வு செய்து சபையில் ஒப்புதல் பெற வேண்டும். சுகாதார வளாகங்களை பொதுமக்கள் நன்கு பராமரித்து பயன்படுத்த வேண்டும். இது குறித்து கிராம சபை மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்துவது அவசியம் ஆகும்.

இதில், கட்டாயமாக ஊராட்சியின் வரவு, செலவு வாசிக்க வேண்டும். அதையடுத்து, வருவாய் துறை, உணவு வழங்கல் துறை உள்ளிட்டவைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அதை எவ்வாறு பெறுவது போன்றவைகள் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ரேசன் கடை விற்பனையாளர்கள் ஆகியோர் மூலம் விரிவாக எடுத்துரைக்கவும் பட இருக்கிறது. எனவே இக்கூட்டத்தில் அந்தந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT