தற்போதைய செய்திகள்

கார் பைக் மீது மோதிய விபத்தில் இளைஞர் சாவு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மல்லிநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன்(29), இவரது சகோதரரி முருகேஸ்வரி(31). இவர்கள் இருவரும் விருதுநகர்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கார் பைக் மீது மோதிய விபத்தில் இளைஞர்  சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மல்லிநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன்(29), இவரது சகோதரரி முருகேஸ்வரி(31). இவர்கள் இருவரும் விருதுநகர் அருகே கோட்டூர் குருசாமி கோயில் சாமி வழிபாடு செய்வதற்காக வந்தார்களாம். இங்கு பூஜை செய்து முடித்து இருவரும் பைக்கில் திரும்பி சென்று கொணடிருந்தனர். அப்போது, விருதுநகர்-சாத்தூர் நான்கு வழிச் சாலையில் மணிப்பாறைபட்டி விலக்கருகே திருநெல்வேலியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கியெறியப்பட்ட பாலசுப்பிரமணியன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல், அவரது சகோதரரி லேசன காயமும் அடைந்தார். இது தொடர்பாக சகோதரரி முருகேஸ்வரி வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் ஹாஜஹானை(23) கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT