தற்போதைய செய்திகள்

குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து நகராட்சி அலுவலகம் முற்றுகை

விருதுநகர் நகராட்சியின் 32-வது வார்டு பகுதியில் கடந்த சில நாள்களாகவே குடிநீர் விநியோகம் கழிவு நீர் கலந்து துர்நாற்றத்துடன் வருகிறது. அதேபோல் மற்றவைகளுக்கு பயன்படுத்தப்படும் உப்பு நீரிலும் கலந்து

எஸ். பாண்டியன்

விருதுநகரில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக் கூறி 32-வார்டு பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

விருதுநகர் நகராட்சியின் 32-வது வார்டு பகுதியில் கடந்த சில நாள்களாகவே குடிநீர் விநியோகம் கழிவு நீர் கலந்து துர்நாற்றத்துடன் வருகிறது. அதேபோல் மற்றவைகளுக்கு பயன்படுத்தப்படும் உப்பு நீரிலும் கலந்து வருகிறது. இதனால், எந்த வேலையும் செய்ய முடியாமல் குடிநீருக்கும், உப்பு நீருக்குமாய் அலைந்து திரிந்து எடுத்து வரவேண்டியிருக்கிறது. இதனால், கூலி வேலைக்கும் செல்ல முடியாத நிலையேற்பட்டிருக்கிறது.

எனவே இச்செயலைக் கண்டித்து அப்பகுதியின் நகராட்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அங்கு ஆணையாளர்(பொறுப்பு) மற்றும் தலைவர் உள்ளிட்டோர் இல்லாததால், நேரடியாக இளநிலை பொறியாளர் தனசேகரனிடம் சென்று புகார் செய்தனர். ஏற்கனவே இது தொடர்பாக நகராட்சி கூட்டத்திலும் பேசியுள்ளேன். ஆனால், எந்த விதமான நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்து வருகின்றனர்.  மேலும், குடிநீர் விநியோகம் இல்லாத நாள்களில் வெளியிலிருந்து டிராக்டர்களில் வரும் ஒரு குடம் குடிநீரை ரூ.10-க்கு வாங்க வேண்டியிருப்பதாகவும் புகார் தெரிவித்தனர். ஏற்கனவே நகராட்சியின் சார்பில் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை மட்டும் குடி தண்ணீர் விநியோகம் செய்து வருவதாகவும், அதிலும் கழிவு நீர் கலப்பதால் மிகவும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதை தடுக்க வேண்டும் என  நகராட்சி அலுவலர்களை கேட்டுக் கொண்டனர். 

இதைக் கேட்டறிந்த இளநிலை பொறியாளர் குறிப்பிட்ட வார்டில் குறுகிய தெருக்களாக இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் கழிவு நீரை அகற்றும் லாரியை உள்ளே கொண்டு செல்ல முடியாத நிலையிருக்கிறது. அதனால், சிறிய அளவிலான கழிவு நீரை அகற்றும் வாகனத்தை கொண்டு அகற்றி உடனே இப்பகுதியில் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இளநிலைப் பொறியாளர் தனசேகரன் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT