முகப்பு
தற்போதைய செய்திகள்

குழந்தைகள் சுகாதாரத்தில் தொலைக்காட்சியின் தாக்கம் குறித்த ஆராய்ச்சி: கலசலிங்கம் பேராசிரியருக்கு ரூ.3.74 லட்சம் உதவி

தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் குழந்தைகள் சுகாதாரத்தில் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களின் தாக்கம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் எம்.ஜெயக்குமரனுக்கு புது தில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனம் ரூ.3.74 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

Updated On : 2 ஏப்ரல், 2014 at 10:19 AM
பகிர்:

தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் குழந்தைகள் சுகாதாரத்தில் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களின் தாக்கம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் எம்.ஜெயக்குமரனுக்கு புது தில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனம் ரூ.3.74 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் எம்.ஜெயக்குமரன் தலைமையில், தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் குழந்தைகள் சுகாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் ஆய்வு நடத்தி, நுகர்வோர் பாதுகாப்பு என்ற பெயரில் அதற்குள் ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிப்பதற்கான அனுமதிக்கு புதுதில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்திற்கு அனுமதிக்கு அனுப்பப்பட்டது.
இதன்படி இந்த ஆராய்ச்சிக்காக, இந்த நிறுவனம் பேராசிரியர் ஜெயக்குமரனுக்கு ரூ.3.74 லட்சம் வழங்கியுள்ளது.

ஆராய்ச்சி நிதி பெற்றமைக்காக பேராசிரியர் ஜெயக்குமரனை, பல்கலைக்கழகத் தலைவர் தி.கலசலிங்கம், வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.