முகப்பு
தற்போதைய செய்திகள்

எருமை மாட்டில் ஏறிவந்து வேட்பு மனு தாக்கல் செய்தவரால் நெல்லையில் பரபரப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். சுப்பிரமணியன் இன்று காலை விநோதமாக எருமை மாட்டில் ஏறி வந்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:53 AM
பகிர்:

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். சுப்பிரமணியன் இன்று காலை விநோதமாக எருமை மாட்டில் ஏறி வந்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தொண்டர்கள் 8 பேர் உடன் வர, எருமை மாட்டில் அமர்ந்து வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியபோது, பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பொருளாதாரம் பல மடங்கு வீழ்ச்சி கண்டுள்ளது. எனக்கு காரிலோ வண்டியிலோ வந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் அளவு பொருளாதார வசதியில்லை. என் நண்பருடைய எருமை மாட்டை யாசகம் கேட்டுப் பெற்று வந்தேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.