கடந்த 10 ஆண்டுகளில் அதிமுகவும்-திமுகவும் மின் உற்பத்திக்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருகட்சிகளுமே மீண்டும், மீண்டும் குற்றஞ்சாட்டி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
விருதுநகர் மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சாமுவேல்ராஜுக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை பிரசாரம் செய்து பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் விரோதக் கொள்கையை கடைபிடித்து வந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் மீதும், அதற்கு துணை நின்ற திமுக மீதும் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்தியாவில் 20 கோடி பேர் சில்லறை வணிகத்தை நம்பி உள்ளனர்.
2002ல் பா.ஜ.க ஆட்சியில் அன்னிய நிறுவனங்கள் உள்ளே வர வாஜ்பாய் முன்மொழிந்தார். அதை 2012ல் காங்கிரஸ் ஆட்சியில் அமுலாக்கியது தவறான பொருளாதாரக் கொள்கையை பின்பற்றுவதில் காங்கிரஸ் கட்சியும், மதவாத கட்சியான பா.ஜ.கவும் ஒரே நிலைபாடுதான் கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் எரிவாயு விலை 100 சதம் உயர்ந்துள்ளது. இதனால் உரம், மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
இதனால் தனியார் நிறுவனத்திற்கு கூடுதலாக லாபம் கிடைத்துள்ளது. மதவாதக் கட்சியான பா.ஜ.கவும், பொதுமக்களை பாதிக்க கூடிய வகையில் செயல்படும் காங்கிரஸ் கட்சியும் ஆட்சிக்கு வரக்கூடாது. கடந்த மாதம் முதல் தொடர்ந்து தமிழக முதல்வர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இக்கூட்டங்களில் பா.ஜ.கவை பற்றியோ, மோடி குறித்தோ விமர்சித்து பேசாதது ஏன் என கேள்வியெழுப்பினார்.
புதுதில்லியில் நடந்த 3-வது அணி தொடர்பான அரசியல் கட்சிகளுடனான கூட்டத்தில் பங்கேற்று முதல் கையொழுத்தும் முதல்வர் போட்டுள்ளார். இதுவரையில் ஒருவார்த்தை கூட மோடி பற்றி பேசவில்லை.
மின்தடை குறித்து அதிமுகவும்-திமுகவும் மாறி, மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அக்கட்சிகள் ஆட்சியில் இருந்த போது மின் உற்பத்திக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் இருந்ததுதான் மின்தடைக்கு காரணம் ஆகும். இத்தொகுதியில் போட்டியிடும் இதற்கு முன்பு வரையில் வைகோ சேதுகால்வாய் திட்டத்தை ஆதரித்து பேசினார். பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததும் இத்திட்டத்தை பற்றி பேசாதது ஏன் என கேள்வியெழுப்பினார்.
எனவே பொதுமக்கள் அடிப்படை பிரச்னைகள், தொழிலாளர்கள் பிரச்னைகளுக்காக அன்றாடம் இடது சாரிகள் போராடுகிறது. சென்னை மாநிலத்தை, தமிழ் நாடு என பெயர் மாற்றக் கோரி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் இருந்து கேட்கிறேன். மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சாமுவேல்ராஜூக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என இளைஞர்களையும், பொதுமக்களையும் ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.