முகப்பு
தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் பல்கலை.யில் பி.ஆர்க் புராஜக்ட் கண்காட்சி

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் கட்டடக்கலை புராஜக்ட் கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சியை துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர் தலைமையில், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் திறந்து வைத்து உரையாற்றினார்.

Updated On : 6 ஏப்ரல், 2014 at 1:13 PM
பகிர்:

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் கட்டடக்கலை புராஜக்ட் கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சியை துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர் தலைமையில், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் திறந்து வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: கட்டட வடிவமைப்பு காற்றோட்டம், சுகாதாரம் நிறைந்ததாக இருக்க வேண்டும். கட்டடக் கலை பாரம்பரியமானது. தற்காலத்தில் இக் கலையில் கணினியின் பயன்பாடு வந்துள்ளதுடன், ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கட்டடத்தைத் தூக்கிச் சென்று மாற்றும் நிலையும் உள்ளது. ரெடிமேட் கான்கிரீட் பயன்படுத்துவதில் உள்ள கலை அழகு, முற்காலத்தில் உள்ள கல் கட்டடத்திற்கு இணையாக உள்ளது என்றார்.

கண்காட்சியில் மாணவர்கள் 120க்கும் மேற்பட்ட புதிய கட்டட மாதிரிகளை வைத்திருந்தனர்.துறைத் தலைவர் எம்.முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.