முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி. ஸ்ரீவடபத்ர சயனர் கோயிலுக்கு புதிய கொடிமரம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவடபத்ரசயனர் திருக்கோயிலுக்கு புதிய கொடி மரம் அமைப்பதற்கான பணிகள் உபயதாரர் மூலம் தொடங்கியுள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2014 at 12:34 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவடபத்ரசயனர் திருக்கோயிலுக்கு புதிய கொடி மரம் அமைப்பதற்கான பணிகள் உபயதாரர் மூலம் தொடங்கியுள்ளது.

ஸ்ரீ ஆண்டாள் கோயிலுடன் இணைந்த, ஸ்ரீவடபத்ரசயனர் திருக்கோயில் கோபுரமே, தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக உள்ளது. இக்கோயிலின் கொடி மரம் சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது சேதமுறும் நிலையில் இருந்தது. இதனை அப்புறப்பபடுத்திவிட்டு, புதிய கொடி மரத்தை உபயதாரர் மூலம் அமைக்க கோயில் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது.

திருப்பூர் தொழிலதிபர் டி.ஏ.கல்பஜா பிரேம்சந்தா, இக் கொடி மரத்தை அமைத்துத்தர முன்வந்தார். இதனையடுத்து செங்கோட்டையிலிருந்து வனத்துறையின் ஒப்புதலுடன் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 50 அடி உயரமுள்ள தேக்கு மரம் வாங்கப்பட்டு, கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, வேலைகள் தொடங்கியுள்ளது. பணிகள் அடுத்த 10 நாட்களுக்குள் நிறைவு பெறும். இதனைத் தங்கத்திலான கொடிமரமாக மாற்றுவது குறித்து பின்னர் தெரிவிப்பதாக உபயதாரர் டி.ஏ.கல்பஜா பிரேம்சந்தா வியாழக்கிழமை கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.