முகப்பு
தற்போதைய செய்திகள்

4 நாள்களுக்கு ஒரு முறை தேர்தல் செலவுக் கணக்குகளை தணிக்கைக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்!

மக்களவை தேர்தல் செலவு கணக்குகளை நான்கு நாள்களுக்கு ஒருமுறை தணிக்கை குழுவிடம் வேட்பாளர்கள் சமர்பிக்க வேண்டும் என தேர்தல் செலவின பார்வையாளர் ஏ.கே.ஜெனா கேட்டுக் கொண்டார்.

Updated On : 10 ஏப்ரல், 2014 at 4:11 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:28 AM

மக்களவை தேர்தல் செலவு கணக்குகளை நான்கு நாள்களுக்கு ஒருமுறை தணிக்கை குழுவிடம் வேட்பாளர்கள் சமர்பிக்க வேண்டும் என தேர்தல் செலவின பார்வையாளர் ஏ.கே.ஜெனா கேட்டுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேட்பாளர்கள் தேர்தல் செலவினம் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஏ.கே.ஜெனா, ஏ.கே.திவாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், செலவின பார்வையாளர் ஏ.கே.ஜெனா பேசியதாவது: மக்களவைத் தேர்தலை அமைதியான முறையிலும், பிரச்னையின்றி நடத்துவதற்கு அரசியல் கட்சிகளைச் வேட்பாளர்கள்  மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு அளவில்  ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இத்தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்யும் அனைத்து கணக்குகளையும் பதிவேடுகளில் பராமரித்து வரவேணடும். அதேபோல், வேட்பாளர்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். இதில், குறைந்தது ரூ.20 ஆயிரம் வரையில் ரொக்கமாக வழங்கலாம். அதற்கு மேற்பட்ட தொகையாக  இரு்நதால் கண்டிப்பாக கோடிட்ட காசோலையாகவே வழங்க வேண்டும். இக்கணக்குகளை முறையாக வருகிற 14,18 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தணிக்கை குழுவிடம் சமர்பிக்க வேண்டும் என வேட்பாளர்களை செலவின பார்வையாளர் ஏ.கே.ஜெனா கேட்டுக் கொண்டார்.

Advertisement

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, கோட்டாட்சியர்கள் மணிவண்ணன்(சிவகாசி), உதயகுமார்(அருப்புக்கோட்டை), ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கொங்கன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) பாண்டியராஜன், நேர்முக உதவியாளர்(தேர்தல்) பவானி ஜீஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், தேர்தல் செலவின பார்வையாளர்களின் தொடர்பு அலுவலர்கள் மங்களநாதன், நடராஜன், உதவித் தேர்தல் அலுவலர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.