முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் காப்புக் காட்டில் பயங்கர தீ

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை ஓட்டியுள்ள காப்புக் காட்டில் பயங்கர தீ எரிந்து கொண்டுள்ளது. இதனை அணைக்க இரு நாட்களாகும் என்று கூறப்படுகிறது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:59 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை ஓட்டியுள்ள காப்புக் காட்டில் பயங்கர தீ எரிந்து கொண்டுள்ளது. இதனை அணைக்க இரு நாட்களாகும் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர், மேற்குத் தொடர்ச்சி மலையில் மம்சாபுரத்திற்கு மேற்கே, விரியன்கோயில் பீட் பகுதியில் உள்ள காப்புக் காட்டின் உயரமான மலை உச்சியில் வெள்ளிக்கிழமை மாலை தீ எரிவது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார் உத்தரவின் பேரில் சுமார் 30 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு தீயை அணைக்க அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தத் தீ எரிவது, சுமார் 60 கி.மீ. தூரம் வரை இரவு தெரிந்தது.

இப் பகுதிக்கு ஆடு மேய்க்கச் செல்லுவோர் தீயை வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது மிகவும் உயரமான மலை உச்சி என்பதால் தீயை அணைக்க சனிக்கிழமை இரவு ஆகும் என கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார் கூறுகையில், இரு வனத்துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு தீயை அணைக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

முழுவீச்சில் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தீ எப்போது அணைத்து முடிக்கப்படும் என்பதை கூற இயலாது என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →