முகப்பு
தற்போதைய செய்திகள்

ஓலைச் சுவடிகள் வலைச் சுவடிகளாக மாறிவிட்டன: தேசிய கணித ஆராய்ச்சி மைய இயக்குநர்

அன்றை ஓலைச் சுவடிகள், இன்றைய வலைச் சுவடிகளாக மாறிவிட்டன என்று கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய கணித ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் ஆறுமுகம் கூறினார்.கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கல்வியியல் கல்லூரியில், இன்றைய உயர் கல்வி வளர்ச்சிக்கு இ-கருத்துரைத் திட்டுகளின் பங்கு என்ற தலைப்பிலான ஒருநாள் தேசிய கருத்தரங்கு வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

Updated On : 14 ஏப்ரல், 2014 at 11:10 AM
பகிர்:

அன்றை ஓலைச் சுவடிகள், இன்றைய வலைச் சுவடிகளாக மாறிவிட்டன என்று கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய கணித ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் ஆறுமுகம் கூறினார்.கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கல்வியியல் கல்லூரியில், இன்றைய உயர் கல்வி வளர்ச்சிக்கு இ-கருத்துரைத் திட்டுகளின் பங்கு என்ற தலைப்பிலான ஒருநாள் தேசிய கருத்தரங்கு வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கலசலிங்கம் பல்கலைக்கழக தேசிய கணித ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் ஆறுமுகம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:கூகுளில் மெயில் அனுப்புவதெல்லாம் கணித அடிப்படையில் தான். இதற்கு வெப்பேஜ் அல்காரிதம் என்று பெயர். பல கோடி வெப் பக்கம் இருக்கும்போது, நம்முடைய நமக்கென்ற வெப் பக்கம் எப்படி ஓரிரு விநாடிகளில் வருகிறது என்றால், அது கணித அல்காரிதம் உடனடி முடிவின்படி நடக்கிறது.கணிதம் அனைத்து தொழில் நுட்பத்திற்கும் தாய் என்று சொல்லலாம். கணிதம் பிரெட் என்றால், தொழில் நுட்பம் பட்டர்.நேருக்கு நேர் இல்லாது விவாதம் செய்வதற்கு இ-லேர்னிங் பயன்படுகிறது.

அமெரிக்காவில் தற்கொலை இளைஞர்களிடையே நடப்பதற்கான காரணம் குறித்து ஆராய்ச்சி நடைபெறுகிறது. இதில் இ-லேர்னிங் முறை முக்கியத்துவம் வகிக்கிறது.இ-லேர்னிங் வளரக் காரணம் செலவு குறைவு, குறைந்த காலத்தில் படிக்கலாம். தற்போது இ-லேர்னிங் படித்து சான்றிதழ் பெறலாம். அதே சமயம் இ-லேர்னிங் படிப்புகளை தொடர்ந்துவிட்டு, இடையில் விட்டுப்போக முடியாது.

Advertisement

அதைக் கண்டுபிடித்து விடலாம். கம்பெனிகள் இ-லேர்னிங் மூலம் பயிற்சி அளிக்கலாம். செல்போன் மூலம் இ-லேர்னிங் படிப்புகளை பயணம் செய்யும் போதும் கற்றுக் கொள்ளாலாம்.சுருக்கமாகச் சொன்னால் அன்றைய ஓலைச் சுவடிகள், இன்றைய வலைச் சுவடிகளாக மாறிவிட்டன என்றார் அவர்.கருத்தரங்கு கட்டுரை மலர் முதல் பிரதியை வேந்தர் க.ஸ்ரீதரன் வெளியிட முதல்வர் ஆனந்த கிருஷ்ணவேணி பெற்றுக் கொண்டார்.கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 195 மாணவ மாணவியர் கலந்து கொண்டு கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.

இவர்களுக்கு துணைப் பதிவாளர் பி.ஜி.குருசாமி பாண்டியன் சான்றிதழ்களை வழங்கினார். கே.ஐ.டி. முதல்வர் டாக்டர் எஸ்.ஆர்.ஸ்ரீகுமார் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியை எஸ்.சிவகாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.