மாற்று அணியாக தே.ஜ. கூட்டணி திகழும்: லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சி.வித்யாதரன்
திமுக, அதிமுகவிற்கு மாற்று அணியாக தேசிய ஜனநாயக கூட்டணி திகழ்கிறது. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த அணி நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சி மாநிலத் தலைவர் சி.வித்யாதரன் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் அவர் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ராம்விலாஸ் பாஸ்வான் ஆதரவோடு தமிழகத்தில் தேசிய ஜனநாய கூட்டணி போட்டியிடுகிறது. தமிழகம் முழுவதும் அந்த அணியை ஆதரித்து பிராசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். திமுக, அதிமுக கூட்டணிகள் தாங்கள் சேர்த்து வைத்த சொத்தை பாதுகாக்கும் கூட்டணியாக திகழ்கிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியினர் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களையும், வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை பாரதிய ஜனதா கட்சி நிச்சயம் மக்களுக்கு பெற்றுத் தரும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மதுக்கடைகள் உள்ளது, மின்வெட்டு உள்ளது. ஆனால் மதுவிலக்கு உள்ள குஜராத் மாநிலம், மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கி வருகிறது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தலித் மற்றும் சிறுபான்மையின மக்களை ஓட்டு வங்கிகளாகவே வைத்துள்ளன. மோடி பிரதமரான பிறகுதான் அது தவறு என்பதை உணருவார்கள் என சி.வித்யாதரன் தெரிவித்தார்.