மயிலாடுதுறையில் இளைஞர் வெட்டிக் கொலை
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் துப்புரவு தொழிலாளாக பணியாற்றிய இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் துப்புரவு தொழிலாளாக பணியாற்றிய இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் உள்ள டாக்டர் வரதாச்சாரியர் தெருவைச் சேர்ந்தவர் ரெத்தினம் என்பவரது மகன் ராஜமாணிக்கம் (32).
இவர் மயிலாடுதுறை வட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் அரசு உயர்நிலைப்பள்ளியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு காயத்திரி என்ற மனைவியும்,1 பெண்,2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், ராஜமாணிககம் வியாழக்கிழமை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து, கேணிக்கரை பட்டமங்கல ஆராயத்தெரு வழியாக மூவலூருக்கு மொபெட்டில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஆராயக்குளம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, 3 இரண்டு சக்கர வாகனத்தில் வந்த கும்பல், ராஜமாணிக்கத்தை வழிமறைந்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து செய்தியறிந்த மயிலாடுதுறை உதவி காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கொலையானவரின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து காயத்ரி அளித்த புகாரின்பேரில் டாக்டர் வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்த சி. முனுசாமி, ராஜா, சு.கலியபெருமாள், முருகன், மூ. மணிகண்டன் ஆகியோர் மீது மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
கொலைக்கான காரணம்:
டாக்டர்.வரதாச்சாரியார் தெருவில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலின் தீமிதி திருவிழா கடந்த14-ம் தேதி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மறுதினம் நடைபெற்ற கறிவிருந்து உபசரிப்பின்போது, ராஜமாணிக்கத்திற்கும், முனுசாமிக்கும் தகறாறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டார்களாம். இதனால், ஏற்பட்ட விரோதத்தின் காரணமாக ராஜமாணிக்கம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகின்றனர்.